கடன் எல்லை வசதியை இந்தியா ஓராண்டுக்கு நீடித்தது!

Date:

இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையின் நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின்போது, இந்தியாவால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர உதவியின் ஒரு பகுதியான, கடன் எல்லை வசதி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கடன் எல்லை வசதியில் சுமார் 350 மில்லியன் மீதமுள்ளன என்றும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார். எனினும், சந்தையில் அந்நிய செலாவணியின் கிடைப்பனவு அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட தேவை அதிகமாக இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கடந்த மார்சில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், தற்போது குறித்த கடன் வசதியை இந்தியா நீடித்துள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...