எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் அழிவினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
6.4 பில்லியன் டொலர்களாக வரையறுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறும், இத்தொகை அழிவினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தனியான கணக்கில் திறைசேரியில் வைப்பிலிடப்பட வேண்டுமெனவும் தொடர்புபட்ட தரப்பு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், எமது நாட்டு மக்களை பணத்திற்காக பிணை எடுக்க முடியும் என கப்பல் நிறுவனம் நினைத்தால் அது தவறு எனவும் நாம் யாரும் பணத்திற்கு அடிமை இல்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.