நாட்டிலுள்ள வறிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு மின்சார அதிகரிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கியின் உதவியை கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஆய்வறிக்கை இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டது.
வறுமை மற்றும் சமபங்கு உலகளாவிய நடைமுறை தொடர்பில் உலக வங்கி குழு இந்த விளக்கக்காட்சியை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து கட்டணக் கட்டமைப்பு ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை தாம் கோருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.