கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டை மீறி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மற்றும் கொழும்பில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சீரான வேகத்தில் அதிகரித்து வருவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் பிராந்திய அதிகாரிகளின் மொத்தனமான அணுகுமுறையால், இரண்டு மாவட்டங்களிலும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கான தரவுகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலதிக கொடுப்பனவுகளைப் பெறாவிட்டாலும் கூட, நிலைமையைக் கட்டுப்படுத்த முழு ஆதரவையும் வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தயாராக உள்ளனர், ஆனால் இதுவரை எந்த ஒரு சிரேஷ்ட அதிகாரியும் தங்களை அணுகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலைமையைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிபுணத்துவக் குழுவை கம்பஹாவுக்கு அனுப்புவது மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டார், ஆனால் சிரேஷ்ட அதிகாரிகளின் ஆதரவு மற்றும் உத்தரவு இல்லாமல் டெங்கு நிலைமை சீரடையாது.
குடியிருப்புகள் அல்லது வணிக வளாகங்களுக்குள் அல்லது சுற்றுப்புறங்களில் நுளம்பு உற்பத்தி செய்யும் இடங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்தால், அத்தகைய தளங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதிகாரிகள் அத்தகைய நபர்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.