30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 14 வருடங்கள் நிறைவு: வடக்கிலும் தெற்கிலும் வேறு வேறான நினைவலைகள்!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் ஒன்றிணைத்த போர் வீரர்கள் வெற்றி பெற்று இன்றுடன் 14  வருடங்கள் பூர்த்தியாகின்றன.

அதேநேரம், தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, தமிழ் மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த மே18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நந்திக்கடல் தடாகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் உயிரிழந்ததையடுத்து, 30 வருடங்களாக நாட்டை ஆக்கிரமித்திருந்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை துடைத்தழிக்க முப்படை வீரர்களினால் முடிந்தது.

மிக மோசமான போரின் கடைசி நாட்களில் பொதுமக்களைப் பாதுகாக்க உலகத்தரம் வாய்ந்த மனிதாபிமான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள்.

சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.

ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள்.

இறுதியில் அவர்கள் அனைவரும் வெட்டைவெளிப் பிரதேசங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். தாய்மார்கள் பிள்ளைகளை மர நிழலிலும் பழுதடைந்து நகரமுடியாமல் கைவிடப்பட்ட வாகனங்களின் நிழலிலும் கிடத்தி வெயிலிலிருந்து பாதுகாத்தார்கள்.

யுத்தம் முனைப்படைய முனைப்படைய துன்பங்களும் அதிகரித்தன. அவர்கள் கஞ்சியை மட்டுமே பருகி உயிரைப் பிடித்துக்கொண்டார்கள். படிப்படியாக கஞ்சியின் கட்டித்தன்மை குறைந்து நீர்த்தாக உப்பில்லாக் கஞ்சியாக வழங்கப்பட்டது.

கஞ்சி வழங்கும் அறிவித்தல் கிடைத்தவுடன் சிறுவர்கள் தங்களது குடும்பங்களுக்காக அதைப் பெறுவதற்குப் பாத்திரங்களுடன் ஓடுவார்கள். இவ்வாறு கஞ்சியைச் சேகரிக்கச் சென்றிருந்த பல சிறுவர்கள் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் ஷெல் தாக்குதல்களுக்கும் அகப்பட்டார்கள்.

போரின் இறுதிப்பகுதியில் இறந்த தம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை புதைக்கக்கூட முடியாத நிலையில் இறந்த உடலங்களை வீதியிலேயே விட்டுவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்து போனார்கள்.

தாய்மார்களின் கைகளிலிருந்து பிள்ளைகள் விடுபட்டுப்போனார்கள். தங்களுடைய உயிரைக் காக்க இறந்த உடலங்களின் மேலாகவே அவர்கள் ஓடவேண்டியிருந்தது. இவ்வாறு மே 18 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தது.

இதேவேளை இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் வடக்கு வாழ் தமிழர்களும் இன்று அனுசரிக்கின்றார்கள்.

தனித் தமிழ் ஈழம் என்ற முழக்கத்தோடு உலக நாடுகளில் உதவியோடு இருந்த இலங்கையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது ஒரு பெரும் படையான பிராபகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள்.
தங்களுக்கு விடுதலையை வாங்கி தர உதித்த ஒரு உன்னத தலைவனாக பிராபகரனை கருதினர் இலங்கை வாழ் தமிழர்கள்.

அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி.

இங்கு இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஈழ தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை இராணுவம்.

இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் பலர் காணாமல் போயினர். பல நூறு பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.

இதன் 14வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வீரமும் கண்ணீரும் ரத்தமும் ஒருங்கே கலந்து உருவாகிய முள்ளிவாய்க்கால் என்ற கோர சம்பவம் பதியப்பட்ட நாள் இன்றாகும்.

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 1 இலட்சம் ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர்.இந்த நினைவு கூரும் தினத்தில் அனைவரும் ஒன்று திரண்டு இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதுடன் நீதிக்கான பயணத்தில் நம்பிக்கையுடன் செயல்படுவோம்!

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...