பிரேசிலிய கூட்டுறவு முகவரகம் (ABC) மூலம் பிரேசில் அரசாங்கம், இலங்கைக்கு 10,000 இன்சுலின் குப்பிகள் மற்றும் 8 மில்லியன் பொலிப்ரொப்பிலீன் டிப்ஸ் (சேலைன் ஊசிகள்) போன்ற மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று (17) இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனஸிடம் இருந்து வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்த மருத்துவப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.