தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்படுமா?

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க அவரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, உயிரிழந்த ஷாஃப்டரின் சடலத்தை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரியுள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக, இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜீந்திர ஜெயசூரிய
அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இதன்படி, இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது.

பெப்ரவரி 17ஆம் திகதி, கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, ஐவரடங்கிய விசேட வைத்திய குழுவொன்றை நியமிப்பதற்காக விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழு பெப்ரவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...