சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது