புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண கருத்து வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் எமது புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் மூன்று கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுளளதாக கூறப்படுகிறது.
இப்படியான சம்பவங்களின் போதே எமது நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தரப்பிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என ஹர்சன ராஜகருண கூறியுள்ளார்.