பொ.ப. ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் இன்று விவாதம்!

Date:

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்று பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் எப்போதும் மக்களுக்காக நிற்பதாகவும், எனவே உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தமக்கு ஆதரவாக நிற்பார்கள் என நம்புவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கட்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஆகியனவற்றைப் பொருட்படுத்தாமல் இந்த சட்டவிரோத, நெறிமுறையற்ற பிரேரணையை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனக ரத்நாயக்க கோரியுள்ளார்.

அதேநேரம், ஜனக்க ரத்நாயக்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். உத்தர லங்கா சபை மற்றும் நிதஹாஸ் ஜனதா சபா ஆகியனவும் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் வாக்களிக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...