புத்தளத்தைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்.எச்.அப்துன் நாசர் ரஹ்மானி சர்வதேச அரபு மொழிக் கவிதை நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்!

Date:

அரபு அல்லாத நாடுகளில் அரபுக் கவிதையின் நிலவரம் பற்றிய ஆய்வரங்கொன்று அண்மையில் சவூதி அரேபிய  மதீனா நகரில் இடம்பெற்றது.

அரசு மொழி பேசாத நாடுகளின் அரபு மொழியில் கவிதை படிக்கின்ற திறமைப் பெற்ற கவிஞர்களுக்கான இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துன் நாசர் ரஹ்மானி என்பவர் கலந்துகொண்டு பரிசில்களும் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை இந்நிகழ்வில் உலக நாடுகளிலிருந்து பல அரபுக் கவிஞர்கள் கருத்தாளர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளத்திலிருந்து கருத்தாளராக அழைக்கப்படிருந்த அப்துன் நாசர் ரஹ்மானி ஹஸ்ரத் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

அரபு மொழி பேசாதா ஒரு நாடு என்ற வகையில் இலங்கையைச் சேர்ந்த அறிஞர்  இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தரும் விடயமாகும்.

 

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...