தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போதே அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சித் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த 23ஆம் திகதி இலங்கை திரும்பிய போது 3.5 கிலோ தங்கம் மற்றம் பெறுமதி மிக்க தொலைபேசிகள் போன்ற பொருட்களுடன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.