மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அண்மையில், ஜெரோம் பெர்னாண்டோ நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அனைத்து மதங்களையும் மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.