நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை வெல்லுமா சென்னை? இறுதிக்கட்டத்தில் ஐபிஎல் போட்டி!

Date:

மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஏற்கனவே, பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னையை களத்தில் சந்திக்க குஜராத் அணியும் குவாலிஃபயர் 2 வெற்றியின் மூலம் தயாராகவுள்ளது.

இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இறுதிப்போட்டியில் வெல்லும் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முடிவில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா ? அல்லது நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை சென்னை தன்வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...