27 ஆயிரம் கோடி ரூபாய் வரி அறவிட தவறியமை கண்டுபிடிப்பு

Date:

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரியை அறவிட தவறியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இதேவேளை, முறையாக வரியை செலுத்தாத பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் 100 பேரின், சரியான தகவல்கள் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான பரிவர்த்தனைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள உரிய முறைகள் எதுவும் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை என்பதுத் தொடர்பில், இந்த மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அறவிடுவதற்கு தவறவிடப்பட்டுள்ள இந்தப் பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கு பொறிமுறை ஒன்றைத் தயாரிக்கவும், புதிய இறைவரிச் சட்டங்களை தயாரிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்த மேற்பார்வைக்குழு வழங்கும் எனவும் அதன் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...