அடுத்த மாதம் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அனைவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி தேர்தல் செயலகத்திற்கு அழைத்து வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பெரும்பான்மையான வாக்காளர்கள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களை கையாண்டதாகவும் தெரிவித்தார்.
ஆளும் அதிகாரம் ஒரு பொது இயக்கத்தை அடைவதைத் தடுக்க அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூன்று மாதங்களாக பிற்போடப்பட்டிருப்பது மக்களின் உரிமைகளை மீறும் செயலாகும்.
மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், தற்போதைய அரசியல் அமைப்பை மாற்ற விரும்பும் ஆயிரக்கணக்கான குடிமக்களால் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.