டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பகுதிகளுக்கு விசேட குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களினால் சில பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 409 ஆகும்.
இந்த நிலையில் நிறுவன சுற்றுச்சூழலை துப்புரவு செய்வதற்காக இன்று(2) வௌ்ளிக்கிழமை காலை 2 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.