இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் இன்று புறப்படுகிறது

Date:

(file Photo)

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று தமிழகம் வரவுள்ளார்.  மாலை 5 மணியளவில், சர்பானந்தா சோனோவால், சென்னை கப்பல் முனையத்தில் இடம்பெறும் நிகழ்வின்போது கார்டில்லியா குரூஸ், என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சென்னையின் கிழக்கு கடற்கரையை, கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...