இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்கும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நாஓ கிளொனுக்குமிடையிலான சந்திப்பொன்று திங்களன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது விவசாயம், வான்வழித் தொடர்புகள், தொழில்வாய்ப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது என அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.