உடலை வெண்மையாக்க கிரீம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Date:

பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவன அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு. ரஞ்சனா தெரிவிக்கையில்,

கடந்த வாரம் நுகர்வோர் அதிகாரசபையின் விசேட அதிரடி சோதனைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் விபரங்கள் இன்றி சட்டவிரோத லோஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் 7 வகையான உடல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் 6 வகையான பாதரசத்தின் அளவு ஒரு கிலோவிற்கு 8.1 மில்லிகிராமிலிருந்து 31.540 மில்லிகிராம் வரை மிக அதிகமாக இருந்ததாக இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வுக்கூடம் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் உடலை வெண்மையாக்கும் கிரீம்களில் பாதரசம் அதிகம் உள்ளதாகவும், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஒவ்வொரு உறுப்புக்கும் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான கிரீம்கள் மற்றும் திரவங்களை கொள்வனவு செய்யும் போது, ​​குறிப்பாக இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுமாயின் அங்கு பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...