மேயர் பதவி நீக்கப்பட்ட போதிலும் ரோசி இன்னும் மேயர் இல்லத்தில் இருக்கிறார்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

Date:

முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (08) முறைப்பாடு செய்துள்ளது.

கொழும்பு நகர முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்க மேயர் பதவி நீக்கப்பட்ட போதிலும் அவர் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாகவும் அரச சலுகைகளை அனுபவிப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

”கொழும்பு நகர முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்க அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில்  இன்னும் வசிக்கிறார். இப்போது அவர் மேயர் இல்லை. சாதாரண வேட்பாளர்.

அனாலும் அவர் இன்னும் அங்கே வசிக்கிறார். இதுமுறைகேடானது .
அவரது பதவிக்கு காலம் முழுவதும் மின்கட்டணமாக தொண்ணூற்றொரு இலட்சம் ரூபாய்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது.

சராசரியாக மாதாந்தம் 2 இலட்சம் ரூபா மின் கட்டணம் வருகிறது. இது மக்களின் வரிப்பணம். கொழும்பு வாழ் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படுகின்றனர் .

வீதி விளக்கு ஒன்று உடைந்தால் மாற்றுவதற்கு 6 மாதங்களாகிறது. ஆனால் மாநகர சபை மேயரின் தேவைகளை நிறைவேற்றுகிறது.

மேலும் நான்கு சேவையாளர்கள் போதுமான நிறையில் ரோசிக்கு 9 சேவையாளர்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் பணம் இவ்வாறு  மோசடி செய்யப்படுவது குறித்து முறைப்பாடு அளித்துள்ளோம்” என மேற்றபடி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...