வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடையோர் அடையாளம்!

Date:

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத்தில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.

ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...