வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த இணக்கத்தையும் வெளியிடவில்லை என அந்த கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம்.
அத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார்.
1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், இதுவரை மாகாணங்களுக்கு ஏன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை.
இதனால், அவர் புதிய மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சரத் வீரசேகர கூறியதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.