அண்மைய வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA ) எச்சரித்துள்ளது.
தொழில் வல்லுனர்களுக்கு சுமையாக உள்ள அண்மைய வரி அதிகரிப்பை திருத்தும் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரு தீர்மானத்திற்கு வந்து அதன் திட்டத்தை வாரத்திற்குள் அறிவிக்கத் தவறினால், ஏனைய நிபுணர்களின் ஆதரவுடன் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
GMOA மற்றும் தொழில் வல்லுநர்கள் எவ்வாறு திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்கு தங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளனர்.
வரி தொடர்பான தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.