பாடசாலை அதிபரை ஹஜ் கடமையை நிறைவேற்ற வழியனுப்பி வைத்த பாடசாலைச் சமூகம்!

Date:

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக்  புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அப்பாடசாலையின்  பழைய மாணவர் சங்கத்தினர் (200,000/=) இரண்டு இலட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பு செய்தனர்.

நாளை 13 ஆம் திகதி பயணமாகவுள்ள அதிபரை  வழியனுப்பும்  நிகழ்வு இன்று (12) பாடசாலையில் சங்கத்தின்  ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையில் விஞ்ஞான துறையை ஆரம்பித்து பல மாணவர்களை வைத்திய துறைக்கும், விஞ்ஞான பட்டதாரிகளையும் உருவாக்கிய ஓய்வு பெற்றுச் சென்ற ஏ.எஸ்.எம். மாஹிர் ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக  SCIENCE FORUM, SCIENCE UNION ஆகியோர் இணைந்து 100,000/= ரூபா காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன் உட்பட அதன் உறுப்பினர்கள், பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அதன் செயலாளர் சீ.எம். தாவூத் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம்.ஜெஸீர் , ஆசிரியர்கள் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகள் யாவும் மதியபோசணத்துடன் நிறைவு பெற்றது. இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதால் பதில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஏ. அஷ்ரப் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...