தெஹியோவிட்ட,தெரணியகல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை!

Date:

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை இரவு 7 மணி வரை அமுலில் இருக்கும்.

மேலும், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் சீதாவக பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவு, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, கிரியெல்ல, எஹெலியகொட, எல்ஹெலியகொட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, பெல்மடுல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...