ASIAN SCIENTIST 100 100 இதழின் 2023 பதிப்பில் நான்கு இலங்கையர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
Asian Scientist Magazine என்பது ஒரு விருது பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழாகும், இது ஆசியாவின் R&D செய்திகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது.
ஆசியாவின் முன்னணி STEM மற்றும் ஹெல்த்கேயார் மீடியா நிறுவனமான சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட வைல்ட் டைப் மீடியா குழுமத்தால் இந்த இதழ் வெளியிடப்படுகிறது.
Oceanswell இன் ஸ்தாபகரான Asha DeVos, மற்றும் Dr. Rohan Pethiyagoda ஆகியோர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து சதுரங்க ரணசிங்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இருந்து அஷானி சவிந்த ரணதுங்க ஆகியோருடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆஷா டிவோஸ் ஒரு கடல் உயிரியலாளர், கல்வியாளர் மற்றும் நீல திமிங்கல ஆராய்ச்சி துறையில் முன்னணியில் உள்ளார். கடல் பாலூட்டி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் மற்றும் நாட்டிலிருந்து முதல் தேசிய புவியியல் ஆய்வாளர் ஆவார்.
TED ஃபெலோவாகவும் இருக்கும் டி வோஸ், இலங்கையின் முதல் கடல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான Oceanswell ஐ நிறுவினார்.
கலாநிதி ரோஹான் பெத்தியகொட விலங்கியல் துறையில் 2022 லின்னியன் பதக்கத்தை வென்றார், மேலும் பதக்கம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். இலங்கையில் பல்லுயிர் பாதுகாப்பில் அவரது நிலையான ஆராய்ச்சி, எழுத்து மற்றும் வாதிட்டதற்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
சதுரங்க ரணசிங்க 2022 ஆம் ஆண்டில் 7ஆவது ஷேக் ஃபஹாத் ஹிரோஷிமா-ஆசியா விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் விருதைப் பெற்றார்.
இந்த விருது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணருக்கு விளையாட்டு மருத்துவத்தில் அவர்களின் பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.
அஷானி சவிந்த ரணதுங்க, கைத்தொழில் மற்றும் விவசாய கழிவுகளை பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியமைக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்மாண மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்துவதற்கும் 2022 OWSD-Elsevier அறக்கட்டளை விருதைப் பெற்றுள்ளார்.