யாழில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Date:

அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று (21) சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்லைப்பிட்டி பகுதியில் கட்டுமானங்களின் பொழுது மண்டை ஓட்டு துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி நீதிமன்ற கட்டளையை பெற நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற கட்டளையினை பெற்று ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி மேலதிகமாக அகழப்பட்ட நிலையில் 27 பற்கள் உட்பட ஒரு மனித எலும்புகூடு எச்சம் மீட்கப்பட்டிருந்தது.

மேலதிகமான எச்சங்கள் இல்லாத நிலையில் குறித்த சான்று பொருள் ஆய்விற்காக அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சுமார் 20 வருடங்கள் பழமையானதாக இருக்கக்கூடும் என ஊர்காவற்றுறை பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

“டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை...

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...