போர் காலத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியதில்லை-ஹரினி அமரசூரிய

Date:

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

போர் காலத்தில் கூட வார இறுதி நாட்களில் கூட நாடாளுமன்றத்தை அவசரமாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டியுள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாது, ஒரு நபரின் தேவைக்கு அமைந்து இது நடக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.

அவசரமாக வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் எப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதில்லை.

வரவு செலவுத்திட்டம் விவாதங்களில் போது, மிக அரிதாக சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும். பிரித்தானிய நாடாளுமன்றம் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் கூடியதில்லை.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி மக்களின் வறுமையை அதிகரித்து வருகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்கிய சமூக நிவாரணங்களையும் அரசாங்கம் படிப்படியாக இல்லாமல் ஆக்கி வருகிறது எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...