இன்று பேராதனை பல்கலைகழகம் பொதுமக்களின் பார்வைக்கு!

Date:

பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூலை1ஆம் திகதியை திறந்த நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

ஆகவே, இன்று முதல் மக்கள் பார்வைக்காக பல்கலைக்கழகம் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆய்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் ஜூலை 1ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் ஒரு பல்கலைக்கழகம் பொதுமக்களின் சார்பில் திறந்த நாள் தினத்தை அறிவித்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...