இலங்கையில் அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை நேற்று முதல் (01) முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்காக வழங்கப்பட்ட அரை சொகுசு பஸ் சேவை அனுமதிப்பத்திரத்தை இன்றிலிருந்து வேறு சேவைக்காக மாற்றியமைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.