பிரான்சில் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் அடக்கம்: இரண்டு பெரிய நகரங்களில் கட்டுக்கடங்காத கலவரம்

Date:

பிரான்சின் பாரிஸ் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரே நகரில் காரில் சென்ற 17 வயது இளைஞனை பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிஹலின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.

நிஹலின் உடல் நான்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு தொழுகை செய்யப்பட்டது.

பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நான்டெர்ரேயில் உள்ள ஒரு மலை உச்சியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இதில், நிஹெலின் தாயார் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலம் வந்தபோது நூற்றுக்கணக்கானோர் சாலையோரம் நின்று அஞ்சலி செலுத்தினர். கல்லறை பகுதியில் பத்திரிக்கையாளர்கள் தடை செய்யப்பட்டனர்.

சில பத்திரிகையாளர்கள் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர். நிஹல் இறுதிச்சடங்கின் போது வன்முறை அதிகரிக்கலாம் என்பதால் பொலிஸார்  அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறி, பொலிஸாரின் உத்தரவை மீறி காரை இயக்க முயற்சித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நான்டெர்ரே நகரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

கடந்த 5 நாட்களாக நிகழ்ந்த இந்த போராட்டத்தின்போது, ஏராளமான வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. முக்கிய நகரங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்

வன்முறை தொடர்பாக 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...