திரிபோஷாவுக்கு பதிலாக முட்டை வழங்க நடவடிக்கை!

Date:

திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிறார்கள் முட்டைகளை அதிகமாக உண்ணுவதால், திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் திரிபோஷ சிறுவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளமை பிரச்சினையாக எழுந்துள்ளது.

மேலதிக ஊட்டச்சத்தாக வழங்கப்பட்ட திரிபோஷவை வழங்க முடியாத நிலை காணப்படுமாயின் அதற்கு நிகரான மாற்றீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

குடும்பநல சேவையாளர்கள் என்ற அடிப்படையில், 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு மீண்டும் திரிபோஷ வழங்கப்படும் வரையில், மாற்றீடாக மாதாந்தம் ஒரு  தொகை முட்டையை வழங்குவதற்கு பரிந்துரைப்பதாகவும் அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...