இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஐந்து நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று முதல் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக ஜூன் 29ம் திகதி முதல் நேற்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
இதேவேளை, கடந்த 28ம் திகதி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 301.15 ரூபாவாகவும், விற்பனை விலை 316.67 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிட்த்தக்கது.