முத்துராஜா யானை நல்ல மனநிலையில் உள்ளது: இனி இலங்கைக்கு திரும்பி வராது – தாய்லாந்து அரசாங்கம் அறிவிப்பு

Date:

இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானை தாய்லாந்து மன்னரின் ஆதரவில் இருப்பதால் இலங்கைக்கு மீளவும் திரும்பாது என அந்நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து வந்தடைந்த முத்துராஜா, இலங்கையில் 22 வருடங்கள் வாழ்ந்த போதிலும் தனது புதிய சூழலை விரைவில் அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

” முத்துராஜா இப்போது மன்னரின் ஆதரவில் இருக்கின்றது. தற்போது லம்பாங் மாகாணத்தின் ஹாங் சாட் மாவட்டத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

யானை நல்ல மனநிலையில், தலையை அசைத்து, உணவை இரசித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு, கால்நடை மருத்துவர்கள் முழுமையான சோதனைகளை மேற்கொள்வார்கள்.

முத்துராஜாவுக்கு வலது கண்ணில் கண்புரை, அதன் முன் இடது கால் வளைக்க முடியாதது, இடுப்பில் காயம் ஏற்பட்டு நகங்கள் மற்றும் நான்கு கால் பாதங்களிலும் பிரச்னை உள்ளதாக முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு தாய்லாந்து யானைகளான ஸ்ரீ நரோங் மற்றும் பிரதுபா ஆகியவை தொடர்பிலும் வரவுட் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

அவைகளில் ஒன்றுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை அவைகளை கவனித்துக் கொள்ளும் திறன் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, அவைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.

இலங்கையில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்து யானைகளைப் பராமரிப்பதற்குத் தங்களுக்குத் திறன்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...