வீதி விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

Date:

கற்பிட்டி, பள்ளிவாசல்துறையில் நேற்றிரவு வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்கள் அவ் இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கள்-எளிய மஸ்ஜித் மாவத்தையைச் சேர்ந்த மற்றும் ஒரு மாணவர் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு சாஹிரா கல்லூரியில் 10 ஆம் தரத்தில் கல்வி பகிழ்கின்ற உமர் நவ்ஷாத் எனும் மாணவர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...