புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் பங்களிப்பில் பொலிஸ் கண்காணிப்புக் கூடம் திறந்துவைக்கப்பட்டது!

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி. சில்வா (DIG வடமேற்கு – வடக்கு) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தினால் (PUTWA) புதுப்பிக்கப்பட்ட பொலிஸ் கண்காணிப்புக் கூடம், புத்தளம் பொலிஸ் நிலையத்திடம் கையளிக்கும்  நிகழ்வு கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் நகரில் நடைபெற்றது.

இக் கண்காணிப்புக் கூடத்தை பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அவர்களுடன் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி HQI குலதுங்க திறந்து வைத்தனர்.

மேலும் இந்த திறப்பு விழாவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் SSP கே.எஸ்.கே. ரூபசிங்க அவர்களும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டார்.

இதன்போது, வர்த்தக வணிக நடவடிக்கைகளுடன் சமூக ரீதியான நடவடிக்கைகளில் புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தினால் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய   நாலக டி சில்வா அவர்கள், புத்தளம் நகரத்தின் காவல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதன் அழகை பராமரிப்பதிலும் வர்த்தக சமூகத்தின் பங்களிப்பை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வுக்கு புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்க தலைவர் வை.எம் நிஸ்தாத், செயலாளர் இஹ்ஸாஸ் இல்யாஸ் உட்பட நிருவாக உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிடிகம லசா’...

பேருவளையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்-அல்-அப்ரார் பள்ளிவாசலை பார்வையிட்டார் பிரிட்டன் தூதுவர்.

இலங்கையின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜித்-அல்-அப்ரார்...

ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி

ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி...

நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு...