தாய்மார்களுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை இலங்கை உறுதிசெய்ய வேண்டும் !

Date:

இலங்கை அரசாங்கம், அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயமாக உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகிறது.

குறித்த விடயம் தொடர்பான தமது புதிய ஆய்வு தொடர்பில், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

வீழ்ச்சியடைந்த வருமானம், வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் என்பன, பெண்களின் கொள்வனவு திறனைக் குறைத்துள்ளன.

அத்துடன், தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட, அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக, சுகாதாரம் மற்றும் போஷாக்கு என்பன பின்னடைவை சந்தித்துள்ளன.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...