மாதிவெல குடியிருப்பில் முன்னாள் எம்பிக்கள் தங்கியிருப்பதால் தற்போதைய எம்.பி க்கள் ஐவருக்கு இடமில்லை

Date:

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் சுமார் பத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளைப் பயன்படுத்த அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தங்களுடைய சொந்த பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை பெற்று தமது அன்பான முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளதாகபாராளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே மதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளை பயன்படுத்த முடியும் என பாராளுமன்ற தலைவர்கள் சகல உறுப்பினர்களுக்கும் அண்மையில் நினைவூட்டியுள்ளனர்.

மாதிவெல உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் கிட்டத்தட்ட 110 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மடிவெல எம்.பி.யின் வீட்டுத் தொகுதி முழுவதுமாக நிரம்பியிருப்பதால் ஐந்து எம்.பி.க்களுக்கு வீடுகளை வழங்க முடியாதுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வீட்டு வசதி கோரியுள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளி மாகாணங்களில் வசிப்பவர்கள்.

இதேவேளை, எரிபொருள் விலை உயர்வினால் வெளி மாகாணங்களில் வசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற வாரத்தின் போதும் ஏனைய பல நாட்களிலும் கொழும்பில் தங்கியிருப்பதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...