எல்ல – வெல்லவாய ரக்கித்தாகந்த விகாரை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (18) காலை பேருந்து ஒன்று சரிவில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.