50 ஓவர் உலக கிண்ண தொடரானது இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்காளதேஷ், நடப்பு சம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலக கிண்ண தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்ப போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்திய அணி தனது தொடக்க போட்டியில் அவுஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.
இந்நிலையில் உலக கிண்ண தொடரில் பங்குபெறும் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலக கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5 ஆம் திகதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து உலக கிண்ண தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை விரைவாக தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.