வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பதில் ஜனாதிபதியின் செயலாளராக சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான சாந்தனி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (20) பிற்பகல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.