அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் இணைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணி எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரியவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக உருவாக்கப்படும் இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா செயற்படுவார் என அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கூட்டணியில் இணையவது சம்பந்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் சில சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன் மேலும் சில பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இளம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.