‘டுவிட்டர்’ பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு’

Date:

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம்.

நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்று கூறினார்.

வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...