கிராம அலுவலர்கள் மட்டத்தில் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை:பிரதமர்

Date:

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிராமத்தில் பணிபுரியும் பிரதான அதிகாரி கிராம உத்தியோகத்தர் என்பதால் அவரை பலப்படுத்துவதற்கு அமைச்சு என்ற ரீதியில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச சேவையை நவீனமயப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் இவ்வேளையில் கிராம அலுவலர்கள் மட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இது தொடர்புபட்ட திணைக்களங்களின் தலைவர்களுடன் இன்று பொது நிர்வாக அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“நிவாரணத் திட்டத்தை மிகவும் துல்லியமாக முன்னெடுப்பதற்கு பிரதேச செயலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை உரிய முறையில் கிடைக்கப்பெறுகின்றதா என்ற வரம்புக்கு அப்பால் அமைச்சு செயற்பட வேண்டும்.

341 உள்ளாட்சி அமைப்புகளின் மதிப்பீட்டுக் கட்டண முறையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தொடர்புபட்ட அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளிலும் உத்தேச டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

அத்துடன், இக்கலந்துரையாடலில் முஸ்லிம் மரணங்களுக்கான மரணச் சான்றிதழ்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

முஸ்லிம்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டாலும், உரிய இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், இவற்றை செய்வதில் தடைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பிட்ட உடல்நிலையில் அரசாங்க வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வரும் முஸ்லிம் ஒருவர் இறந்தால், சம்பந்தப்பட்ட வைத்தியரின் வைத்திய பரிந்துரையின் பேரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்று பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...