உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் 8300 மெட்ரிக் தொன் யூரியா நன்கொடை!

Date:

8300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த யூரியா உரத்தொகையானது, பெரும்போகத்தில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது.

இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் விவசாயிகளுக்கு 15000 மெட்ரிக் தொன் வரையான யூரியா உரம், உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...