பாகிஸ்தான் அரசியல் பேரணி மீது குண்டு வெடிப்பு: 44 பேர் பலி!

Date:

பாகிஸ்தானில் பேரணியின் போது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 44 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

மேலும் 150 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...