புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் , விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பிரிவுகளுக்கும் ஆங்கிலம் மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழிகளுக்கும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், மொத்தம் 7,342 புதிய ஆசிரியர் நியமனங்கள் அரசால் வழங்கப்பட்டன.
எவ்வாறாயினும், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக, பல பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை பூர்த்தி செய்ய முடியாது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.