கடந்த சில நாட்களாக தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 27 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெய்ஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் சீன மாகாணங்களை தாக்கிய டோக்சுரி சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால் வட சீனாவில் கனமழை பெய்து வருகிறது. கன மழையால் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.