ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆக்களை ஊர்களில் நடத்தலாம்: ஜம்இய்யதுல் உலமா அனுமதி

Date:

கொவிட் 19 காலத்தில் புதிதாக ஜும்ஆ ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் மார்க்க ரீதியான வழிகாட்டல்களைப் பேணி தொடர்ந்தும் ஜும்ஆ நடத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு ஊரில் ஒரு ஜும்ஆ நடத்துவதே அடிப்படையாகும் என்ற ஷாபி மத்ஹபின் வழிகாட்டலில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆக்களை நடத்துவதற்கு கடந்த காலங்களில் உலமா சபை அனுமதி வழங்காத போதும் நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் மார்க்க வழிகாட்டல்களைக் கவனத்திற்கொண்டு பிறிதொரு ஜுமுஆவை நடாத்துவதற்கு அனுமதியுள்ளது என்ற வழிகாட்டலை தற்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ளது.

ஓர் ஊரில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது பிறிதொரு இடத்தில் ஜுமுஆ நடைபெறுமாயின் ஷரீஅத்தின் பார்வையில் இரண்டாவது ஜுமுஆ செல்லுபடியற்றதாகும் என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிடுவதாலும் ஜும்ஆவுக்கென்று ஷாபிஈ மத்ஹபில் சில முக்கியமான நிபந்தனைகள் இருப்பதாலும் குறிப்பாக அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுசேர முடியாத நிலைமை இருந்தாலே தவிர, ஒரு ஊரில் ஒரு இடத்தில் மாத்திரமே ஜும்ஆ நடாத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டலை 2022.05.11 ஆம் திகதிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ACJU/NGS/2022/11 சுற்றறிக்கை வழங்கியிருந்தது.

இன்றைய தினம் வெளியிட்டுள்ள ACJU/FRL/2023/70-360 இலக்க வழிகாட்டலில் இலங்கைவாழ் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் தமக்கு மத்தியில் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் மார்க்க விவகாரங்களில் ஆலிம்களின் வழிகாட்டல்களுடன் ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாகக் கொண்டே செயலாற்றி வந்துள்ளனர் எனவும் தற்போது மார்க்க ரீதியாக ஜுமுஆவை நிறைவேற்றுவதற்கு அனுமதியுள்ள இடங்களில் உங்களது ஜுமுஆக்களை நிறைவேற்றிக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களை வேண்டிக் கொள்கிறது.

ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை  இவ்விணைப்பில் பார்வையிடலாம்.

https://acju.lk/news-ta/acju-news-ta/3016-jumuah-statement

 

1 COMMENT

  1. I’m here kindly requesting to please change the content of this article its complete wrong comparing with this article

Comments are closed.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...